ஏர்டெல்-ன் இலவச ஆஃபர்.. ஜியோவுக்குப் போட்டியாக 5.5 கோடி மக்களுக்கு 49 ரூபாய் திட்டம் இலவசம்..!
இந்தியாவில் கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலையின் மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் அனைத்து நிறுவனங்களும் தங்களால் முடிந்த உதவிகளை அளித்து வருகிறது. இதன் வாயிலாகச் சனிக்கிழமை ரிலையன்ஸ் ஜியோ சிறப்புத் திட்டங்களையும், இலவசத் திட்டங்களையும் அறிவித்துள்ள நிலையில் தற்போது பார்த் ஏர்டெல் அறிவித்துள்ளது.
ஏர்டெல் அறிவிப்பு
தற்போது ஏர்டெல் அறிவித்துள்ளது அறிவிப்பின் படி குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு (Low Income Group) உதவும் வகையில் சுமார் 5.5 கோடி ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் தனது 49 ரூபாய் திட்டத்தை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த இலவச திட்டத்தின் மதிப்பு 270 கோடி ரூபாய்.
49 ரூபாய் திட்டம் இலவசம்
இந்த 49 ரூபாய் திட்டத்தின் கீழ் ஒரு ஏர்டெல் வாடிக்கையாளர் 38 ரூபாய் மதிப்பிற்கு டாக்டைம் மற்றும் 100 MB அளவிலான இண்டர்நெட் டேட்டா 28 நாட்களுக்குப் பயன்படுத்தும் அளவிற்குப் பெறுவார்கள். ஏர்டெல்-ன் இந்த இலவச திட்டம் நடப்பு வாரத்தில் நடைமுறைக்கு வர உள்ளது. மேலும் இந்தி ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே.
ரிலையன்ஸ் ஜியோ
இதேபோல் ஏர்டெல் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, சனிக்கிழமை கொரோனா தொற்றுக் காலத்தில் ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்ய முடியாத பட்சத்திலும் அவர்களுக்குத் தினமும் 10 நிமிடம் டாக்டைம் அடிப்படையில் மாதம் 300 நிமிடங்கள் என மொத்த தொற்று காலத்திற்கும் இந்த இலவசங்களை அறிவித்துள்ளது.
ஜியோபோன் வாடிக்கையாளர்கள்
இதேபோல் ஜியோபோன் வாடிக்கையாளர்கள் செய்யும் ஒவ்வொரு ரீசார்ஜ் திட்டத்திற்கும், மற்றொரு ரீசார்ஜ் திட்டம் இலவசமாக வழங்கப்படும் எனவும் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது. இதேவேளையில் வருடாந்திர மற்றும் பன்டில் திட்டங்களுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளது.