*🔯 பிரச்சனைகளை தீர்க்கும் எளிய பரிகாரங்கள்!*

in hive-172186 •  2 years ago 

🔯 பிரச்சனைகளை தீர்க்கும் எளிய பரிகாரங்கள்!

எந்த விதமான பிரச்சனைகள், கஷ்டங்களையும் போக்கும் எளிய, விரைவில் பலன் தரக்கூடிய பரிகாரங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.

*🔯ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை (கண்திருஷ்டி) விரட்டும் ஆற்றல் உண்டு.

*🔯 வாழை மரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.

*🔯 கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம்.

🔯 மீன்தொட்டி வைத்து அதில் கருப்பு, சிகப்பு மீன்களை வளர்க்கலாம்.

🔯 வாசலில் கண் திருஷ்டி கணபதி படத்தையும் மாட்டி வைக்கலாம்.

*🔯 வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள்அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம்.

🔯ஆகாச கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது. அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.

*🔯 வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.

  • 🔯வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.

  • 🔯அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்.

*🔯 முடக்கற்றான், பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது, ஆகியவைகளைக் சேர்த்து அரைத்து அந்தப் பொடியை பசு கோமியத்தில் கரைத்து வீட்டிலோ, வியாபார ஸ்தலத்திலோ, தெளிக்க தீய சத்திகள், கண் திருஷ்டி, நீங்கி செல்வ செழிப்பு பெறலாம்.

*🔯 கடன் தொல்லை போன்றவை இருந்தால், விநாயகரின் ஆலயத்தில் அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து, தேங்காய் எண்ணெயையும், தன் குலத்தை காக்கும் குலதெய்வத்திற்கு பிடித்தமான விளக்கெண்ணையும் ஒன்றாக கலந்து, அர்ச்சனை செய்த தேங்காயில் ஊற்றி தீபம் ஏற்றினால் பிரச்சனைகள் விலகும். நம்முடைய முன்னேற்றம் தேங்காமல் விருத்தியாகும்.

*🔯 வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.

🔯 கடல் தண்ணிரில் குளித்தால் உடலில் இருக்கும் அந்த ஏழு சக்கரங்களும் பலம் பெறும்.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Welcome dear
welcome to steemit continue to post your achievement using this guides
Lists of Achievements by Cryptokannon

You can check out our new community, where quality post must be upvoted before the expire, and give aways might be done monthly

Please Just visit click the link below 👉Steem Aware

Make posts And subscribe for free

Screenshot_20230528-100816~2.png

You can join any community you wish using this to link Explore steem communities then you scroll down to community of your choices and subscribe (it's absolutely free)

Hello friend...

The newcomer community is a special community for new steemit users, you can only release achievement 1 to achievement 6 posts and compilation tasks in this community

I invite you to participate in the Newcomer Achievement Program. As a first step to complete the Achievement 1 task you can follow this link: Achievement 1: Verification Through Introduction

Note

Anyone is prohibited from publishing general posts on the Newcomer Community other than the Achievement Task, as a penalty we will mute your posts

I appreciate your cooperation
Regards

Thank you so much