தன் எஜமானியுடன் ஒரு பூனை கடைவீதி வழியே சென்று கொண்டிருந்தது. அப்போது தெருக்களில் சுற்றித்திரியும் மற்ற பூனைகளை பார்த்துக் கொண்டே செல்கிறது அப்போது அந்த பூனைக்கு ஓர் ஆசை வந்தது நாமும் இதைப் போல் வெளியே சுதந்திரமாக சுற்றித்திரிந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தது அந்த எண்ணம் அதற்கு மகிழ்ச்சியை தந்தது. ஒரு நாள் அந்த பூனைக்கு தப்பிச் செல்ல சந்தர்ப்பம் கிடைத்தது அதனைப் பயன்படுத்திக் கொண்டு அது வெளியே தப்பிச் சென்றது. இதை அறிந்த அதன் எஜமானி அந்த பூனையை எல்லா இடங்களிலும் தேடி அலைந்தார் ஆனால் அது கிடைக்கவில்லை. எஜமானி மிகவும் கவலைப்பட்டார் தன் காணாமல் போன் பூனையை நினைத்து. ஆனால் அந்த பூனையோ தனக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என எண்ணி வெளியே சுற்றித் திரிய ஆரம்பித்தது சிறிது நேரம் கழித்து அதற்கு பசிக்க ஆரம்பித்தது இதுவரை அறிந்திடாத ஒரு உணர்வு அதை வாட்டியது. செய்வதறியாது திகைத்து நின்றுக்கொண்டிருந்தது அப்போது ஒரு வீட்டின் ஜன்னல் வழியாக ஒரு பெண்மனி ஒரு பையை தூக்கி எறிந்தார் ஓடோடி சென்று ஆசையோடு பார்த்தால் அவை அனைத்தும் மீன் கழிவுகள் இருந்தாலும் பசி தாங்க முடியவில்லை அதை உண்ணவும் மனது வரவில்லை சிறுது நேரம் யோசித்துக் கொண்டே இருந்தது. அப்போது அங்கு வந்த வேறொரு பூனை அந்த கழிவுகளில் இருந்து தனக்கு தேவையானதை உண்ண ஆரம்பித்தது இதை ஆச்சர்யமாக பார்த்த வீட்டுப் பூனை அந்த பூனையைப் பார்த்துக் கேட்டது இதை எப்படி உண்ணுகிறாய் என்று அதற்கு அது சொன்னது இங்கே கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு பிறகு சிறிது தூரம் சென்று மீண்டும் வேறு ஏதாவது கிடைத்தால் அதை சாப்பிட்டுவிட்டு வேறு எங்காவது ஏதாவது கிடைக்குமா என்று தேடுவேன் என்றது அதற்கு வீட்டுப் பூனை அப்படியானால் நீ ஒரு வேலை வயிறு நிறைய சாப்பிட நாலைந்து இடம் செல்வாயா எனக் கேட்டது. அதற்கு ஆம் என்றது அது இதைக் கேட்டதும் அதிர்ந்து போன வீட்டுப் பூனை கிடைத்ததை உண்டு உறங்க இடம் தேடியது அந்த நேரம் பார்த்து திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது கவலை இன்னும் மிகைத்தது நன்கு மழையில் நனைந்து குளிரில் நடுங்கிக் கொண்டு ஒதுங்க இடம் தேடியது ஒரு வழியாக ஓரிடம் கிடைத்தது அங்கே ஒதுங்க சென்றபோது அங்கிருந்த ஒருவர் அதை அங்கிருந்து விரட்டிவிட்டார் மீண்டும் வேறு இடம் தேடி அலைந்தது மீண்டும் ஒர் இடம் கிடைத்தது அங்கே ஒதுங்க செல்லும்போது ஒருவர் அங்கே குப்பை கொட்டிவிட்டார். வாடிய உள்ளத்தோடும், கண்ணீரோடும் மீண்டும் அடுத்த இடம் தேடிச் சென்றது செல்லும் வழியில் ஒரு பூனை ஒரு ஓரமாக படுத்து உறங்கிக் கொண்டிருந்தது. அந்த இடம் சேரும், சகதியுமாக இருந்தது. அதனருகில் சென்று நீ எப்போதும் இங்குதான் உறங்குவாயா எனக் கேட்டது அதற்கு அந்த பூனை ஆம் என்று சொல்லிவிட்டு வா இங்கே என் பக்கத்தில் படுத்துக் கொள் என்று அதற்கும் இடம் கொடுத்தது அந்த பூனை வேறு வழியில்லாமல் அங்கேயே படுத்துக் கொண்டு சிந்தித்தது நாம் இது வரை பசியே அறிந்ததில்லை நமக்கும் பசிக்கும் முன்னரே நம் எஜமானி நமக்கு உணவு கொடுத்து விடுவார் அதுவும் வயிறு நிறைய ஒரே இடத்திலேயே கிடைக்கும் ஆனால் இங்கே வேறுவிதமாக இருக்கிறது. நாம் சாப்பிட்டு பின் நாம் விரும்பும்போது நமக்கென இருக்கும் அழகிய இடத்தில் படுத்து உறங்கி விடுவோம் ஆனால் இங்கே இப்படி நாற்றத்தில் உறங்க வேண்டியதாகிவிட்டதே என மனம் வருந்தியது. அப்படியே கண்கள் உறங்கியது. காலையில் எழுந்ததும் மீண்டும் பசி வந்தது உணவுக்காக மீண்டும் அலைந்து திரிந்தது இப்போது தான் விளங்கியது வெளியில் சுற்றித்திரிவது மட்டும் சுதந்திரம் அல்ல என்று கலக்கத்தோடு ஏங்கி நிற்கும் போது திடீரென இரண்டு கைகள் அந்தப் பூனையை தூக்கியது யார் என்று முகத்தை பார்த்தால் தனது எஜமானி அதனை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து மகிழ்ச்சியோடு தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றார். அந்த எஜமானி வீட்டு வாசலை அடையும் போது இந்த பூனைக்கு அந்த வீடு மாளிகையாக காட்ச்சியளித்தது.
பூனை மாளிகை
3 years ago by ayub124 (28)