எதுவுமே செய்யும் வரை நிச்சயம் முடியாதவைதான்.. ஆனால் செய்து பார்க்கும்போதுதான் தெரியும்.. அடடா இவ்வளவு ஈசியானதா இது என்று. ஒரு காரியத்தில் இறங்காமலேயே அது கஷ்டம் என்று விலகி நிற்பது பலருக்கு பழக்கமாக உள்ளது. நிச்சயம் அது தவறான எண்ணமாகும். எதையுமே இறங்கிப் பார்த்து விட வேண்டும். அப்போதுதான் அது முடியுமா, முடியாதா என்ற திடமான சிந்தனைக்கே நாம் வர முடியும்.
தயக்கம் தேவையில்லை :
சிலர் ஒரு விஷயம் செய்வதற்கு முன்பே அது கடினமாக இருக்கும் என்று நினைத்து அதைச் செய்ய தயங்குவார்கள். ஆனால் அதைச்செய்தால் தான் தெரியும் அது மிகவும் சுலபமானது என்று. ஒரு விஷயத்தை எளிதாகவும் செய்ய முடியும் கடினமாகவும் செய்ய முடியும் நாம் எப்படி அதைச் செய்கிறோமோ அதைப் பொறுத்தே ஈசியா அல்லது கடினம் என்பது அமைகிறது.
என்னால் முடியும் :
எதுவும் என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும். எதுவும் சாத்தியம் தான் என்று முதலில் நினைக்க வேண்டும். என்னால் இதை செய்ய முடியுமா என்று யோசிப்பதை விட வெற்றி தோல்லியைப் பற்றிக் கவலைப்படாமல் அதைச் செய்து பார்க்கலாமே.
தினமும் போட்டால் ஈஸி :
சிலர் கணக்கு கடினம் என்பார்கள். தினமும் பத்து கணக்கு போட்டால் கணக்கு மிகவும் எளிதாகி விடும். எந்த ஒரு விஷயமும் பார்க்கும்போது கடினமாகத் தெரியும் என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே என்று துணிவுடன் செயல்பட்டால் அந்த செயலும் ஈசி தான்.
ஈடுபாடு வேண்டும் :
ஆர்வமுடனும் ஈடுபாட்டோடும் செய்தால் எல்லா விஷயமும் ஈஸி தாங்க. தன்னம்பிக்கையும் விடாமுயற்சியுமே நம்முடைய வெற்றிக்கு வழிவகுக்கும். வாழ்க்கையில் எல்லா விஷயமும் கடினம் என்று நினைக்காதீர்கள். முயன்று பாருங்கள் முயன்றால் முடியாதது எதுவுமில்லை இவ்வுலகில்.
எல்லாமே ஈஸிதான் :
எதையுமே பார்த்த உடனே இது ரொம்ப கடினமாக இருக்கும் போல என்று நினைக்காதீர்கள். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை எனக்கு நான் நிச்சயம் இதைச் சிறப்பாகச் செய்வேன் என்ற எண்ணத்தோடு செய்து பாருங்கள். எல்லாமே உங்களுக்கு ஈஸி தான்.