ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதமுள்ள ஐபிஎல் 2021 போட்டிகளை நடத்த முடிவெடுத்த பின் போட்டிகளை செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி அக்டோபர் 15ம் தேதி இறுதிப் போட்டியுடன் முடிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துபாய், ஷார்ஜா, அபுதாபியில் போட்டிகளை நடத்துவதற்கான யுஏஇயுடனான பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 25 நாட்களில் ஐபிஎல் 2021 தொடரின் மீதமுள்ள போட்டிகளை முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே போல் வெளிநாட்டு வீரர்கள் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்குரிய பேச்சுவார்த்தைகளிலும் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. அப்படி அவர்களால் வர முடியவில்லை எனில் மாற்று ஏற்பாடுகளுக்கு யோசிக்க வேண்டும் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் செய்தி ஏஜென்சிக்குத் தெரிவித்துள்ளார்.