வயதானவர்களின் நிரந்தரப் பிரச்னை, கை,கால்வலி, மூட்டுவலி மற்றும் உடல்வலி. வலி மாத்திரைகளால் பெரிய பலனும் கிடைப்பது இல்லை. மருந்துகள் இல்லாமல், ஓய்வு நேரங்களில் சில முத்திரைகளைச் செய்தாலே, மூட்டுவலி காணாமல் போய்விடும்.
சந்தி முத்திரை
வலது கை: மோதிர விரல், கட்டை விரலின் நுனிகள் தொட வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.
இடது கை: நடுவிரல், கட்டை விரலின் நுனிகள் தொட வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.
காலை மாலை என இருவேளையும் 20 நிமிடங்கள் செய்யலாம்.
பலன்கள்:
முழங்கால் மூட்டுவலி சரியாகும். முழங்கால் மூட்டு சவ்வுக் கிழிதல், மூட்டு பலமின்மை, மூட்டில் உள்ள திரவம் குறைதல், வீக்கம், வலி சரியாகும்.
சந்தி முத்திரை செய்தால், மூட்டுகளில் ஈரப்பசை உருவாகி, மூட்டுக்கள் ஒன்றோடு ஒன்று உரசாமல் தடுக்கும். அதிக தூரம் நடப்பவர்கள், மலையேறுபவர்கள், நின்றுகொண்டே வேலைபார்ப்பவர்கள் போன்றோர், சந்தி முத்திரை செய்ய உடனடியாக வலி குறையும். இடுப்பு எலும்புத் தேய்மானம், சவ்வு விலகல், ஈரப்பசை குறைதலுக்கு சிறந்த பலன் அளிக்கிறது.