100% நம்மை தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இதைவிட சிறந்த ஒரு தற்காப்பு இல்லை.

in hive-193429 •  3 years ago 

முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற மருத்துவம்.

ஆவி பிடித்தல்!

நம் பாட்டி வைத்தியம், உலகெங்கும் தவிர்க்க முடியாத தற்காப்பு வைத்தியமுறையாகி விட்டது.
ஆனால் இன்னும் நாம் அதை சரியாக புரிந்து கொள்ளாமல் விழிப்புணர்வற்று வாழ்கிறோம். போராடி ஜெயிக்க நம்மிடமே ஆயுதம் இருந்தும் அதை நாம் பயன்படுத்தவில்லை.

1.இத்தாலி, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் முழுமையாக மீண்டு வரக் காரணமான உக்தி இதுதான் எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள்.இத்தாலி, சீனா, ஜப்பான்,இஸ்ரேல் போன்ற நாடுகள் தொற்றிலிருந்து முழுமையாக மீண்டு வரக்காரணமான உக்தி இதுதான் எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள். வரும் முன் காப்பது தான் சிறந்த வைத்திய முறை என்று அவர்கள் புரிந்து
செயல் பட்டார்கள்.

2.செலவற்றது. எளிதானது.

3.ஆவிபிடிக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியவைகள்.

A) நாள் 1க்கு .... 2 முறை.

B) கண்டிப்பாக இரவில் படுக்கச்செல்லும் முன் 1 முறை.

(இரவு 10 மணி நேரம் அந்த பகுதிக்கு ஓய்வு கொடுப்பதால் தூங்கும் நேரம் நாசியில் தொற்றின் அறிகுறி தொண்டையைச்சென்றடைய வாய்ப்பு அதிகம்)

C) வெளியில் ஏதாவது கூட்டத்திற்குள் சென்று வந்தவுடன் ஒரு முறை.

D) ஆவியானது மூக்கின் துவாரம் வழியாக ஆழமாக செல்லும் படி மூச்சை இழுத்தல் அவசியம்.

E) 10- 15 நிமிடங்கள் அவசியம்.

4.அன்றாடம் செய்யும் கடன்களுடன் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

5.அரசு மருத்துவமனைகள் இதனை வருபவர்களுக்கெல்லாம் எடுத்துச் சொல்லி செய்முறையை விளக்கிக் படம் போட்டுக் காண்பித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

  1. அரசாங்கம் எதை எதையோ வீட்டுக்கு வீடு இலவசமாக கொடுக்கிறார்கள் ஒரு ஆவி பிடிக்கும் உபகரணத்தை( Rs.150/-) இலவசமாக கொடுக்கலாம்.
    செய்முறையை சின்னத்திரையில் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

  2. Rotary, Lions,Jaycees,போன்ற சேவை சங்கங்கள், டாக்டர்கள்,தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த மக்களுக்கு இந்த செய்தியை சென்றடையும் வகையில் இதைக் கொண்டு செல்ல வேண்டும்.

8.பலருக்கு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி 1-2 மாதங்களில் தொற்றை அடியோடு நாம் விரட்டிவிட முடியும்.

9.இந்த திட்டத்தை அமல் படுத்த அரசாங்கத்திற்கு இதை எடுத்துச் செல்லுங்கள்.

  1. இதைவிடுத்து வருபவர் போகிறவர்களுக்கு எல்லாம் Test எடுத்துக் கொண்டு எண்ணிக்கையை தினமும் அறிவித்துக் கொண்டே இருப்பது மக்களிடம் தேவையற்ற பீதியைத்தான் உண்டாக்கும். அதை ஊடங்கள் இனும் மிகைப்படுத்து கிறார்கள்

அதனால் மனரீதியாக மக்கள் தொற்றினை எதிர்க்கும் வலுவிழந்து விடுவார்கள்.

அதனால் எதிர்ப்பு சக்தியை இழந்து தோற்று எளிதாய் உடலுக்குள் செல்ல வழிவகுக்கும்.

கிட்டத்தட்ட 60 கோடி ஜனங்களின் உடலில் ஏற்கனவே எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்க வேண்டும்.

தடுப்பூசியும் அதற்கு பெரிதும் உதவுகிறது.
கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் கைககளைக் கழுவிக் கொள்வது, இடைவெளி விட்டு வாழ்வது அனைத்தும் நம் பாதுகாப்பை மேம்படுத்தும் மறவாதீர்கள்.

நமக்குத் தேவை புத்திசாலித்தனமான பாதுகாப்பின் செயல்களே அன்றி பய உணர்வல்ல என்பதை புரிந்து கொண்டு சுற்றம் மற்றும் நண்பர்களுக்கெல்லாம் தெம்பையும் நம்பிக்கையையும் ஊட்டும் வகையில் பேசுங்கள் !

" பாதுகாப்பான சுழல், பாதுகாப்பான உணர்வை மேம்படுத்துங்கள்"

"Where fear ends there life begins "

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!