கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத தகவல்கள்*

in hive-193429 •  3 years ago 

வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்*

இன்றே நீங்கள் உங்கள் வீட்டில் ஆரம்பியுங்கள்*.

  1. உங்கள் துணியை நீங்களே முதலில் துவைக்க பழகுங்கள்.

அதுவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லாமல் சொல்லும் முதல் பாடம்.

  1. காலையில் எழுந்தவுடன் குளித்து இறைவனைத் வணங்குங்கள்.

உங்கள் மனைவிக்கு சொல்லாமல் சொல்லும் இரண்டாவது பாடம்.

  1. முடிந்தால், சமயலறையில் முடிந்த உதவிகளை செய்யுங்கள். நம் வீடு. நாம் செய்வோம். இது கூட்டு குடும்பத்தின், கூட்டு முயற்சியில் நாம் சொல்லாமல் சொல்லும் மூன்றாவது பாடம்.

  2. காபி குடித்தவுடன் , அதை முடிந்தால் அலம்பி வைக்கவும். இல்லையென்றால்அலம்பும் இடத்தில் வைக்கவும். இது நமக்குள்ளே ஒரு கட்டுப்பாட்டை வைத்துக் கொள்ள உதவும். இது நமக்கான நான்காவது பாடம்.

  3. எங்கெல்லாம் உதவி செய்ய முடியுமோ, வீட்டில் உதவுங்கள். அது முக்கியமான ஐந்தாவது பாடம்- மற்றவர்களுக்கு உதவும் பழக்கம் வர வேண்டும்.

  4. காலை காபி குடிக்கும் போதோ, இல்லை எது சாப்பிட்டாலும் , குறை கூறாதீர்கள். வேண்டுமென்றால் நல்ல முறையிலே கூறுங்கள். கோபமும், அதட்டலும், நமக்கு ரத்த அழுத்தம் தரும். இது ஆறாவது பாடம்.

  5. உண்ணும் முன், பெரியவர்கள் இருந்தால், அவர்களை கேளுங்கள் -சாப்பிட்டு விட்டார்களா? என்று. குழந்தைகளை கூப்பிட்டு கேளுங்கள். இது ஏழாவது பாடம் .

  6. முடிந்த வரை நடந்து செல்லுங்கள். பண மிச்சம், கஞ்சத்தனம் என்று இல்லை. நமது கால் நடக்கக் கற்றுக் கொண்டால், நாம் நமது காலில் இறக்கும் வரை , நின்றும், நடந்தும் வாழலாம். இது வாழ்க்கையின் எட்டாவது பாடம்.

  7. அடுத்தது நம்மை அழிக்கும் தொலைக்காட்சி. அது கத்திக் கொண்டு இருந்தாலும், நீங்கள் ஒரு நல்ல புத்தகத்தை எடுத்துக் கொண்டு படியுங்கள். மின்சார கட்டணம் கண்டிப்பாக குறையும். குழந்தைகள் படிக்க ஆரம்பிப்பார்கள். இது நமக்கு நாமே சொல்லும் ஒன்பதாவது பாடம்.*******Who Will Cry When You Die?"ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்.

அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழப் போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...
“நீ பிறந்த போது, அழுதாய்...
உலகம் சிரித்தது...
நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...

  1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்...

  2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங் களுக்காக அதிக நேரம் செலவழிக் காதீர்கள்.

  3. அடிக்கடி கவலைப் படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலைகள் குறித்து சிந்தியுங்கள்.

  4. அதிகாலையில் எழப்பழகுங்கள்.
    வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

  5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.
    அது நல்ல ஆரோக்கியத் தையும், நண்பர்களையும் பெற்று தரும்.

  6. நிறைய நல்ல புத்தகங்களை படியுங்கள்.
    எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

  7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும் போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வும் இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

  8. உங்கள் குழந்தைகளை, உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக (Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தரக் கூடிய சிறந்த பரிசு, அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

  9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.

  10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.

  11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

  12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த பல சிந்தனைகளும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.

  13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களை கொண்டவனே பணக்காரன்.

  14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.

  15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

  16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காகத்தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

  17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

  18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

  19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும், எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையான வர்களே!
    "ஆணவம் ஆயுளைக் குறைக்கும்..."

மேற்கண்ட *கருத்துக்களை பின் பற்றி,
ஆனந்தமாக வாழுங்கள் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியதை உங்களுக்கு அனுப்பியுள்ளேன்.....!!!!வாழ்க வளமுடன்!

இதை அறுபது வயதிற்கு பின் ஆரம்பித்த என்னால் முடியும் போது, கண்டிப்பாக உங்களால் முடியும். வசதிகள் இருந்தும், வசதி தேவை இல்லை என்று நினைத்து, வசதியை உபயோகப் படுத்தாமல் வாழ்வதே ஒரு பெரிய யோகம்.

*படித்துவிட்டு பகிருங்கள் அனைவருக்கும் அவர்களும் படித்து பயன் பெறட்டும்.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!