தொடர்ந்து பொறுமையுடன் என்னுடைய ஒவ்வொரு செய்தியையும் முழுமையாக கடைசி வரை வாசித்து பயன் பெறுங்கள்.
நம்மை போன்ற சாதாரண மனிதர்களாலும் வாழ்க்கையில் நேர்மையான வழியிலே செல்வந்தர்களாக உயரமுடியுமா? அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?
சிறு துளி பெருவெள்ளம் என்பது உண்மை நிறைந்த ஆன்றோர் வாக்கு. சிக்கனம்தான் மிகப்பெரிய சேமிப்பு. இங்கு சொல்லப்படுகிற ஒவ்வொரு சிறு ஆலோசனையையும், முழு மனதுடன் செயல்படுத்தி வந்தால் நிச்சயமாக நீங்களும் குறைந்தது 10 அல்லது 15 வருடங்களுக்குள் பெரிய செல்வந்தராகலாம் என்பதில் துளிகூட மாற்றுக்கருத்து கிடையாது.
இப்பொழுது இந்த செய்தியில் நாம் என்ன பார்க்க போகிறோம்.
எப்படி சிறுகச் சிறுக சேமிப்பது? அதனால் ஏற்படும் பொருளாதார நன்மைகள் மற்றும் வாழ்க்கையில் உயர்வு சாத்தியம்தானா?
வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டி குடியேறிய பின்னர், காலம் முழுவதும், ( குறைந்தது 15 ஆண்டுகள் முதல் 35 ஆண்டுகள் வரை ) அந்த வீட்டுக்கடனை வட்டியுடன் பெருந்தொகையாக திரும்ப செலுத்துவதில் உண்டாகும் பொருளாதார நஷ்டம் மற்றும் கவலை, மன அழுத்தம் என்னென்ன?
நீங்கள் வங்கி கடன் மூலம் ரூபாய் 24 லட்சம் கடன் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். தவணை முறையில், உங்கள் கடனை வட்டியுடன் சேர்த்து ஒவ்வொரு மாதமும் 15 வருடங்களுக்கு நீங்கள் திருப்பி செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு தெரியுமா?
மாதம் ஒன்றுக்கு Rs.25,790 வீதம் 180 மாதங்களுக்கு நீங்கள் திருப்பி செலுத்துகிற உங்கள் பணம் ரூபாய் 46,42,293/-. அப்படியானால் நீங்கள் வாங்கும் ரூபாய் 24 லட்சம் கடனுக்கு, நீங்கள் வட்டியாக மட்டும் செலுத்த வேண்டிய தொகை ரூபாய் 21,42,293 + அசல் ரூபாய் 24 லட்சம். வருடம் ஒன்றுக்கு, நீங்கள் ஏறக்குறைய ரூபாய் 1.5 லட்சம் வட்டியாக மட்டும் செலுத்த வேண்டும்.
அதே சமயம், நீங்கள் கொஞ்சம் பொறுமையாக இருந்து மாதம் ஒன்றுக்கு ரூபாய் 32,000 சேமித்து வந்தால், வெறும் நான்கே வருடங்களில் நீங்கள் சேமிக்கக்கூடிய தொகை ரூபாய் 15,36,000/-. மாதா மாதம் நீங்கள் வங்கியில் ரூபாய் 32,000 செலுத்தாமல், உங்களுக்கு மாதம் ஒன்றுக்கு குறைந்தது 21% வளர்ச்சி பெறுகிற வகையில், நேர்மையான நல்ல லாபம் ஈட்டுகிற தொழில் நிறுவனங்களுடன் இணைந்து உங்கள் பணத்தை சேமிக்கும்போது, உங்களுக்கு 4 வருட முடிவில் திரும்ப கிடைக்கும் தொகை ரூபாய் 24,18,000/-
ரூபாய் 24 லட்சம் கடன் வாங்கி ஒரு வீடு கட்டி, பின்னர் குறைந்தது 15 வருடங்களுக்கு அசலும் வட்டியும் சேர்த்து ரூபாய் 46,42,293/- செலுத்துவதற்குப் பதிலாக, கடன் வாங்கி வீடு கட்டாமல் ஒரு நான்கு வருடங்களுக்கு சொந்த வீடு கட்டுவதை ஒத்திப்போட்டு, மேற்கூறிய வகையில் மாதா மாதம், 4 வருடங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூபாய் 32,000 சேமித்து மொத்தம் ரூபாய் 24,18,000 சம்பாதித்து அந்தப் பணத்தை கொண்டு கடனேதும் வாங்காமலேயே, சொந்தமாக வீடு கட்டிக் குடியேறி வாழ்நாள் முழுவது நிம்மதியாக வாழலாம் அல்லவா?