அமேசான் மினிடிவி முற்றிலும் இலவசம்..!

in ilavasam •  4 years ago  (edited)

அமேசான் மினி டிவி.. யூடியூப், பேஸ்புக்-க்கு போட்டியாக புதிய சேவை.. முற்றிலும் இலவசம்..!

image.png

இந்தியாவில் டிஜிட்டல் பொழுதுபோக்கு மற்றும் OTT தளங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வரும் நிலையில், இந்திய நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களும் இப்பிரிவில் கடும் போட்டியிட்டு வரும் வேளையில் தற்போது அமேசான் புதிதாக ஒரு சேவையை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் ஈகாமர்ஸ், டிஜிட்டல், கிளவுட் எனப் பல பிரிவுகளில் வர்த்தகம் செய்யும் அமேசான் தற்போது புதிதாக ஸ்ட்ரீமிங் சேவையான அமேசான் மினிடிவி -ஐ (Amazon MiniTV) அறிமுகம் செய்துள்ளது.

அமேசான் மினிடிவி

அமேசான் மினிடிவி சேவையின் கீழ் வெப் சீரியஸ், காமெடி, நாடகம், டெக், லைப்ஸ்டைல், உணவு என அனைத்து வகையான வீடியோக்களும் இருக்கும், அனைத்தையும் தாண்டி அமேசான் இந்தச் சேவையை அனைவருக்கும் இலவசமாக அளிக்கிறது.

விளம்பரம் மூலம் வருவாய்
இத்தளத்தின் மூலம் யூடியூப், பேஸ்புக் போன்று விளம்பரம் மூலம் வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளது அமேசான். இதனால் கன்டென்ட் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் அமேசான் மினிடிவி பெரும் வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐஓஎஸ் மற்றும் ஆண்டிராய்டு செயலி

அமேசான் மினிடிவி தற்போது அமேசான் ஆண்டிராய்டு ஆப்-ல் மட்டுமே உள்ளது. விரைவில் ஐஓஎஸ் மற்றும் ஆண்டிராய்டு தொழில்நுட்பத்தில் இயங்கும் தனிச் செயலியாக இருக்கும் அறிமுகமாகும் என அமேசான் தெரிவித்துள்ளது.

அமேசான் ஷாப்பிங் செயலி

தற்போது அமேசான் ஷாப்பிங் செயலியின் முதல் பக்கத்தில் கீழே அமேசான் மினிடிவி-க்கான பேனர் உள்ளது. இதைக் கிளிக் செய்த உடன் புதிய இணையப் பக்கத்திற்குச் செல்லும், அதில் பிரபலமாக ஷோ, வீடியோ ஆகியவை இருக்கும்.

முற்றிலும் இலவசம்

அமேசான் மினிடிவி என்பது அமேசான் ப்ரைம் போன்று மெம்பர்ஷிப் கொண்டு இயங்குவது இல்லை, முற்றிலும் இலவசம் என்பதால் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எளிதாகக் கிடைக்கக் கூடிய ஒன்றாக உள்ளது.

source: goodreturns.in

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!