இரண்டாம் உலகப் போரில் இருந்து பெறப்பட்ட கச்சாப் பீரங்கி ராக்கெட்டு வடிவமைப்புகளில் ஆரம்பித்த வடகொரியா இன்று அமெரிக்காவின் இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர ஏவுகணைகளை சோதனைக்கு உட்படுத்தி கொண்டிருக்கிறது. சும்மா ஜோக் அடிக்காதீங்க அதெப்படி வடகொரியாவில் இருந்து கிளம்பும் ஏவுகணை அமெரிக்காவை வந்து தாக்கும்.?
இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.?? என்பது உங்கள் மனக்குரலின் கேள்வி என்றால் வடகொரியா உங்களுக்கு பதில் மிகவும் கசப்பானதாக இருக்கும்.
இண்டிகான்டினென்டல் ஏவுகணைகள் வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை முயற்சிகள் நம்பகமான நீண்ட தூர ஏவுகணைகளை (இண்டிகான்டினென்டல் ஏவுகணைகள்) கட்டமைப்பதில் கவனம் செலுத்துகின்றன என்பது வெளிப்படை. அவைகள் மிகவும் பிரதானமான அமெரிக்காவை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
உலகின் எந்தப் பகுதியையும் தாக்கக்கூடும் 2017-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி பியோங்யாங், அதன் ஒரு வெற்றிகரமான கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கி அழிக்கும் ஏவுகணை (ICBM) ஒன்றை வெற்றிகரமாக நடத்தியது. அப்படியான ஹெவசோங் -14 ஏவுகணையானது உலகின் எந்தப் பகுதியையும் தாக்கக்கூடும் என்று வடகொரியா கொக்கரித்தது.
இடைநிலைத் தூர ஏவுகணை ஆனால் அமெரிக்க ஆரம்ப மதிப்பீடுகள் அந்த ஏவுகணையின் அளவை குறைத்தே மதிப்பிட்டுள்ளன. அமெரிக்க இராணுவம் அது ஒரு இடைநிலைத் தூர ஏவுகணை என்று விவரித்தது, ஆனால் பல அமெரிக்க வல்லுநர்கள், அந்த ஏவுகணை அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தை அடையும் என்று நம்புகிறார்கள்
கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கி அழிக்கும் 2017-ஆம் ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி, வடகொரியா அதன் இரண்டாம் மற்றும் சமீபத்திய ஐசிபிஎம் (கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கி அழிக்கும்) சோதனையை நடத்தியது, அந்த ஏவுகணை சுமார் 3,000 கிமீ உயரத்தை எட்டி பின் ஜப்பான் கடலில் விழுந்துள்ளது.
3724.9 கிலோமீட்டர்கள் என்ற அதிகபட்ச உயரம் இந்த சமீபத்திய சோதனையின் கீழ் குறிப்பிட்ட ஏவுகணை 998 கிலோமீட்டர் என்ற வீச்சு (பயணித்த நிலப்பரப்பு) கொண்டுள்ளது, 3724.9 கிலோமீட்டர்கள் என்ற அதிகபட்ச உயரம் மற்றும் 47 நிமிடங்கள், 12 விநாடிகள் என்ற விமானம் நேரம் கொண்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.
குறிப்பிட்ட வீச்சை தாண்டிச் செல்லக்கூடிய திறன் ஏவுகணை சார்ந்த இந்த அதிகபட்ச உயரம் மற்றும் விமானம் நேரம் சரியானது என்றால் இது குறைந்தது 10,400 கிலோமீட்டர் என்ற தத்துவார்த்த வரம்பு கொண்டிருக்கும் மற்றும் ஒரு ஏவுகணை தாக்குதலின் போது, ஏவுகணையின் அளவு மற்றும் எடை போன்றவைகளில் ஏற்படுத்தபப்டும் மாற்றங்கள் ஆனது அதன் குறிப்பிட்ட வீச்சை தாண்டிச் செல்லக்கூடிய திறனை அதற்கு வழங்கும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
வடகொரியாவின் ஏவுகணை வீச்சானது 11,700 கிமீ உள்ளது இந்த கோட்பாட்டின் கீழ் பார்க்கும் போது வடகொரியாவின் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 9500 கிமீ என்றால் வடகொரியாவின் ஏவுகணை வீச்சானது 11,700 கிமீ உள்ளது. அதே போல வடகொரியாவின் இருந்து நியூ யார்க் நகருக்கு 10,850 கிமீ என்றால் வடகொரியாவின் ஏவுகணை வீச்சானது அதே 10,850 கிமீ உள்ளது. இப்படி பல அமெரிக்க நகரங்கள் மட்டுமில்லாது ராணுவ தளங்களையும் தாக்கும் வல்லமையை வடகொரிய ஏவுகணைகள் கொண்டுள்ளது. ஏவுகணைகளில் அணுவாயுத திணிப்பு.? அமெரிக்காவின் ஊடக அறிக்கைகள், பியோங்யாங் அதன் ஏவுகணைகளுக்குள் பொருந்தக்கூடிய போதுமான அணு ஆயுதங்களை தயாரித்துள்ளதாக கூறியுள்ளன - இது உறுதி செய்யப்படவில்லை. ஒருவேளை உறுதியானால் வட கொரியா ஒரு முழுமையான அணு ஆயுத சக்திகொண்ட அரசாக உருமாறும் என்பதில் சந்தேகமேயில்லை. எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான வேகத்தில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளின் அறிக்கைகளின்படி, வட கொரியா எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான வேகத்தில் அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட அணு ஆயுதங்களை உருவாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஒரு ஜப்பானிய அரசாங்க பாதுகாப்புக் குழுவொன்றும் வடகொரியாவின் ஆயு வேலைத்திட்டங்கள் "கணிசமாக மேம்பட்டுள்ளது" என்று கூறியுள்ளது. இதிலிருந்து வட கொரியா இப்போது அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கலாம் என்ற தகவலையும் நாம் எடுத்துக்கொள்ளலாம். வடகொரிய ஏவுகணைகளின் தோராயமான வீச்சு என்ன.? பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட மற்றும் செயல்பாட்டில் உள்ள நான்கு வகை ஏவுகணைகளான - வஸாங் ஏவுகணையானது 1000கிமீ தூர வீச்சையும், ணோடாங் ஏவுகணையானது 1300 கிமீ தூர வீச்சையும், முசுடான் ஏவுகணையானது 3500கிமீ தூர வீச்சையும், வஸாங் ஏவுகணையானது 6700கிமீ தூர வீச்சையும் மற்றும் பரிசோதிக்கப்படாத கேஎன்-08 ஏவுகணை 11,500கிமீ தூர வீச்சையும் கொண்டுள்ளது.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Congratulations @balu6004! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :
Click on any badge to view your own Board of Honor on SteemitBoard.
For more information about SteemitBoard, click here
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit