வேதங்களின் ஆறு அங்கங்களில் ஓர் அங்கமாக ஜோதிடம் விளங்குகின்றது. எனவே ஜோதிடம். வேத ஜோதிடம் என்றும் கூறப்படும். பாரம்பரியம் மிக்க இந்த ஜோதிடம் இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப ஜோதிடமும் பல்வேறு பரிணாமங்களில் பல்கிப் பெருகிக் கொண்டே செல்கிறது என்றால் மிகை ஆகாது. விரிந்து கொண்டே இருக்கின்றது. பொதுவாக வேத ஜோதிடம் என்றும், மேலை நாடுகளில், மேல் நாட்டு ஜோதிடம் என்றும் இங்கு நம் நாட்டில் தமிழ் ஜோதிடம் (Tamil Astrology) என்றும் இது பல்வேறு பெயர்களையும், பரிணாமங்களையும் பெற்றுள்ளது.
இந்திய ஜோதிடம் பொதுவாக இந்து சோதிடம் என்றும், வேத சோதிடம் என்றும் மற்றும் தமிழ் நாட்டில் தமிழ் ஜோதிடம்(Tamil Astrology) என்ற பெயரில் அறியப்படுகிறது. ஜோதிடத்தில் பொதுவாக சூரியனை வைத்துப் பலன் சொல்லும் முறையும், சந்திரனை வைத்துப் பலன் சொல்லும் முறையும் உள்ளது. மேல் நாட்டு முறையில் சூரியனை வைத்து பலன் சொல்லுவார்கள். தமிழ் ஜோதிடத்தில் சந்திரனின் நிலையை முதன்மையாக வைத்து ஜாதகம் கணிப்பார்கள். குழந்தை பிறக்கும் நேரத்தினைக் கொண்டு அந்த நேரத்தில் நவகிரகங்களின் நிலையை கணக்கிட்டு எழுதுவது ஜாதகம் எனப்படுகிறது. குழந்தை பிறந்த ஊரினபொதுப் பலனாக பன்னிரண்டு ராசிக்கரர்களுக்கும் கணிக்கப்பட்டு வழங்கப்படும் எங்களின் தினசரி ராசி பலன் (Horoscope In Tamil) பகுதி மூலம் நீங்கள் உங்களுக்கான ராசியின் கீழ் இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை முன் கூட்டியே அறிந்து அதற்கேற்ப உங்களைத் தயார் படுத்திக் கொண்டு உங்கள் நாளை இனிமையாக ஆக்கிக் கொள்ள இயலும். எவற்றைச் செய்தால் நன்மை விளையும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து அதற்கேற்ப நீங்கள் திட்டமிட்டு அன்றைய நாளை உங்களுக்கு சாதகமானதாக ஆக்கிக் கொள்ளலாம். எதிர்பாராமல் நிகழவிருக்கும் ஆபத்துக்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். உங்களைத் தேடி வரும் அதிர்ஷ்டத்தை நீங்கள் முன்கூட்டியே அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்வதன் மூலம் அதிர்ஷ்டத்தை ஆரத் தழுவிக் கொள்ளலாம். உறவினர்களிடம் நடந்து கொள்ளும் முறை, உங்கள் ஆரோக்கியம் போன்றவற்றை நீங்கள் அறிந்து கொள்ள இயலும். உங்கள் நாளின் தொடக்கத்தை இனிமையாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அன்று முழுவதும் மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளும் வகையில் உங்கள் அணுகுமுறையை திட்டமிட்டுக் கொள்ளலாம்.் தீர்காம்சம், அட்சாம்சம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு நவகிரகங்களின் நிலையைக் கொண்டு குழந்தையின் ராசியும், நட்சத்திரமும், லக்னமும் குறிக்கப்படுகின்றன.
தமிழ் ஜோதிடத்தில் பல அம்சங்கள் அல்லது பிரிவுகள் உள்ளன. ஜாதகம் கணித்துப் பலன் கூறுவது, ஜாதகம் இல்லாதவர்களுக்கு பிரசன்னம் எனும் முறையில் கேள்வி கேட்கப்படும் நேரத்தில் உள்ள கிரகங்களின் நிலையைப் பொருத்து பலன் கூறுவது என்று பல முறைகள் உள்ளன. மேலும் கடிகாரப் பிரசன்னம், ஆருடப் பிரசன்னம், சோழிப் பிரசன்னம், தாம்பூலப் பிரசன்னம் என பல்வேறு முறைகளில் ஜோதிடம் மூலம் பலன்களை கணித்து கூறும் வழிகள் உள்ளன. கை ரேகை மூலம் பலன் கூறுதல், எண் கணித முறையில் பலன்களைக் கூறுதல் எனவும் மச்ச சாஸ்திரம் எனப்படும் மச்சங்களை வைத்து குணாதிசயங்களைக் கூறும் முறை, சாமுத்ரிகா லட்சணம் என உடல் அமைப்பை வைத்துப் பலன் கூறும் முறை, கை விரல் ரேகை கொண்டு நாடி ஜோதிட முறையில் பலன் கூறுதல் என பலவகை வழி முறைகளில் ஜோதிடம் காணப்படுகின்றது. நாடி ஜோதிடம் என்னும் முறையில் பிருகு நந்தி நாடி ஜோதிட முறை, ஜெய்முனி ஜோதிட முறை என பலவகை தமிழ் ஜோதிட முறைகள் புழக்கத்தில் உள்ளன. மேலும் மரபணு ஜோதிட முறை என்னும் முறை தமிழ் ஜோதிடத்தில் தற்காலத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது என்று கூறலாம்.
எது எப்படியாயினும் ஜோதிட முறையில் முன்கூட்டி பலன்களை அறிந்து கொள்வதன் மூலம் நமது முன்னேற்றத்தை நாம் எளிமை ஆக்க்கிக் கொள்ளலாம் - https://www.astroved.com/tamil/