வலிமை படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருக்கும்.. பிரபல நடிகர் போட்டுடைத்த சீக்ரெட்!
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே தொடங்கிய நிலையில் லாக்டவுன் காரணமாக தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. சூழ்நிலை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்த நிலையில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் ஒரு சண்டைக்காட்சி மட்டும் வெளிநாட்டில் காட்சியாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் படம் ஆக்ஷன் கம் ஃபேமிலி சப்ஜெக்ட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
படத்தின் டைட்டிலுக்கு பிறகு பெரிதாக படம் தொடர்பான எந்த அறிவிப்பும் வந்தது போன்று தெரியவில்லை. இதனால் வலிமை படத்தின் அப்டேட் வேண்டும் என அஜித்தின் ரசிகர்கள் பிரதமர், முதல்வர் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலரிடமும் கேட்டு வந்தனர்.
தன்னுடைய ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் முக்கிய தலைவர்களிடம் வலிமை அப்டேட் கேட்பது வருத்தமடைய செய்வதாக கூறி வருத்தப்பட்டார் அஜித். வலிமை படத்தின் அப்டேட் தொடர்பான தகவலை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் கூறினார்.
அதாவது அஜித்தின் 50வது பிறந்த நாளான வரும் மே 1ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் உள்ளதால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் படம் குறித்த அப்டேட்டை கூறியுள்ளார் நடிகர் ஆர்கே சுரேஷ். நடிகர் ஆர்கே சுரேஷ், வலிமை படக்குழுவினருடன் தொடர்பில் உள்ளார். அவர்கள் அளித்த தகவலின்படி வலிமை படத்தில் அஜித் சில அவுட் ஸ்டாண்டிங் சண்டைக் காட்சிகளை செய்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் வலிமை படம் அஜித்தின் கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். அஜித்தின் தீவிர ரசிகரான ஆர்கே சுரேஷ், படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். வலிமை படம் மீண்டும் ரசிகர்களை திரையரங்குகளுக்கு கொண்டு வரும் ஒரு படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் ஆர்கே சுரேஷ்.
நன்றி : FilmiBeat Tamil