கிரிப்டோகரன்சி என்றாலே பலரும் பிட்காயின் மட்டும் தான் என்று நினைக்கிறார்கள். ஆனால், பிட்காயினைத் தவிர 8000க்கும் மேற்பட்ட கிரிப்டோகாயின்கள் உள்ளன. சரி, அவற்றைக் குறித்து தெரிந்துகொள்ளும் முன் கிரிப்டோகரன்சி என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.
நீங்கள் Amazon அல்லது Flipkart போன்ற ஷாப்பிங் இணையதளங்களுக்குச் செல்கிறீர்கள். நீங்கள் 1000 ரூபாய்க்கு பொருட்களை வாங்குகிறீர்கள் என்றால் அதற்காக உங்களுக்கு 10 Amazon Coinகளையோ 10 Supercoinகளையோ அந்தந்த நிறுவனங்கள் வழங்குகின்றன என்று வைத்துக்கொள்வோம். மீண்டும் பொருள் வாங்கும்போது இந்த காயின்களைக் கொண்டு தள்ளிபடியோ அல்லது முழுப்பொருளையுமோ பெற்றுக்கொள்கிறீர்கள். அப்படியானால் அரசாங்கம் அச்சிட்ட ரூபாய் நோட்டு அல்லாத வேறொரு நாணயத்தை நீங்களும் அந்த நிறுவனமும் செல்லுபடியாகும் செலவாணியாக ஏற்றுக்கொள்கிறீர்கள். இதை கிரிப்டோகரன்ஸி என்று அழைக்கிறோம்.
தற்போது நம்மைப் போன்ற எழுத்தாளர்களுக்கு, அவர்களின் கட்டுரைகளுக்காக வழங்கப்படும் செலவாணி டிரான் (TRON), இதை டிரான் என்னும் ஒரு நிறுவனம் வழங்குகிறது.
இந்த டிரான் நிறுவனத்தின் TRX கிரிப்டோகரன்சியை நீங்கள் பெற்றுக்கொண்டு உங்கள் வாலட்டுக்கும் அனுப்பலாம். அவற்றை ஸ்டேக் (Stake) என்னும் முறையில் சேமிப்பு வைப்பதன் மூலம் Staking rewards எனப்படும் வட்டிக்கு நிகரான வெகுமதிகளையும் அதே நாணயத்திலோ SEEDS போன்ற தொடர்புடைய வேறு நாணயங்களிலோ நீங்கள் பெறுவீர்கள். இவை 2,3 நாட்கள் இடைவெளியில் உங்கள் வாலெட்டிற்குத் தானாகவே வந்துசேரும்.