"சும்மா" இதைப் படியுங்கள்..

in tamil •  3 years ago 

"சும்மா"
🤔🤔🤔

"சும்மா" இதைப் படியுங்கள்..
நிச்சயம் நீங்கள் அசந்துதான் போவீர்கள்!!

உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து, இருந்த இடமே தெரியாமல் போயிருக்கின்றன!

தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் பெருமைப் படுத்திக் கொண்டிருக்கிறது.

சும்மா சொல்லுவோம் தமிழின் சிறப்பை!!

அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த சும்மா.

அது சரி சும்மா என்றால் என்ன??

பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும், தமிழ் மொழியில் உள் வாங்கப் பட்டுள்ள ஒரு வார்த்தை இந்த சும்மா!!

"சும்மா" என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15 அர்த்தங்கள் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை,
நாம் அடிக்கடி கூறும் இந்த "சும்மா" எனும் வார்த்தை எடுத்துக் காட்டும்.

கொஞ்சம் "சும்மா" இருடா!
(அமைதியாக/Quiet)

கொஞ்ச நேரம் "சும்மா" இருந்து விட்டுப் போகலாமே! (களைப்பாறிக் கொண்டு/Leisurely)

அவரைப் பற்றி "சும்மா" சொல்லக் கூடாது!
(அருமை/in fact)

இது என்ன "சும்மா" கிடைக்கும்னு
நினச்சியா?
(இலவசமாக/Free of cost)

"சும்மா" கதை அளக்காதே?
(பொய்/Lie)

"சும்மா" தான் இருக்கு.
நீ வேண்டுமானால் எடுத்துக் கொள் -
(உபயோகமற்று/Without use)

"சும்மா" "சும்மா"
கிண்டல் பண்ணுறான். (அடிக்கடி/Very often)

இவன் இப்படித்தான்.. சும்மா சொல்லிக்கிட்டு
இருப்பான்.
(எப்போதும்/Always)

ஒன்றுமில்லை "சும்மா" சொல்கின்றேன் -
(தற்செயலாக/Just)

இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை "சும்மா" தான் இருக்கின்றது
(காலி/Empty)

சொன்னதையே "சும்மா" சொல்லாதே.
(மறுபடியும்/Repeat)

ஒன்றுமில்லாமல் "சும்மா" போகக் கூடாது - (வெறுங் கையோடு/Bare)

"சும்மா" தான் இருக்கின்றோம் -
(சோம்பேறித் தனமாக/ Lazily)

அவன் "சும்மா" ஏதாவது உளறுவான் -
(வெட்டியாக/idle)

எல்லாமே "சும்மா" தான் சொன்னேன் -
(விளையாட்டிற்கு/Just for fun)

நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த "சும்மா" என்கிற ஒரு சொல். நாம் பயன் படுத்தும் இடத்தின் படியும்…. தொடரும் சொற்களின்
படியும்.. பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது என்றால் அது "சும்மா" இல்லை!

சும்மா வாவது சிந்தித்தீர்களா இதனை..?

உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றவை.

ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணர வைக்கும் மொழியாகும்.

இந்த சும்மா என்கிற வார்த்தையும் அதன் அர்த்தமும் உங்களுக்குப் பிடித்திருந்தால் சும்மா ஒரு vote பண்ணுங்க....

நன்றி

சும்மா
🧚‍♂️
படித்ததில் பிடித்தது!
🧚‍♂️

🙏🙏🙏😷😷😷

சும்மா இருக்காமல் தமிழில் சும்மாவின் சிறப்பை அனுப்பி சும்மா இருந்தயென்னை சும்மாவது பகிரச் சொல்லியதால் சும்மா சும்மா ஏதேதோ செய்திகளைப் பகரும் நான் இன்று சும்மா செய்தியை சும்மாவே பகிர்கின்றேன்!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!