#i want to tell you about me
Hello my dear fellow steemians | என் அருமை Steemian சகோதர சகோதரிகளே,
என் பெயர் வினோ ராயன் - வயது 65. நான் பிறந்த ஊர் தூத்துக்குடி, தமிழ்நாடு மாநிலம், இந்தியா. நான் ஒரு முதுகலை பட்டதாரி. இந்தியாவில் ஒரு பொது காப்பீட்டு நிறுவனத்தில் அதிகாரியாக 47 வயது வரை பணி புரிந்தேன்.
இப்பொழுது கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக தூத்துக்குடி துறைமுகத்தின் வழியாக ஒரு சில நாடுகளுக்கு உப்பு, அரிசி, மக்கா சோளம், போன்ற உணவு சம்பத்தப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறேன்.
எனக்கு 1981 ம் வருடம் 25 வயதில் திருமணம் ஆகி இப்பொழுது மூன்று மகள்கள், ஒரேயொரு மகன் மற்றும் ஐந்து பேத்திகள், ஒரு பேரன் இருக்கிறார்கள்.
1981ம் வருடம் முதல் இன்று வரை நான் ஹத யோகா செய்து வருகிறேன். யோகா சம்பந்தமான ஒரு வெப்சைட் yoga-aid டாட் காம் எனக்கு இருக்கிறது. அந்த வெப்சைட்டை இங்கே steemit டிலே பதிவு செய்திருக்கிறேன்.
நான் பெரிய செல்வந்தனும் இல்லை. அதே சமயம் ஏழையாகவும் இல்லை. சொந்தமாக ஒரு வசதியான வீடு, 4 வீலர், 2 வீலர், ஏற்றுமதி வியாபாரம் இப்படி இறைவன் அருளால் நிறைவாக ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். குறைவு என்று சொல்வதற்கு எதுவுமில்லை.
இப்பொழுது சமீப வருடங்களில், எப்படி ஒரு சாதாரண மனிதன் வாழ்க்கையில் செல்வந்தனாக உயர முடியும் என்கிற நுணுக்கங்களை அறிந்து வைத்திருக்கிறேன். அந்த சூத்திரங்களை, நான் மற்றவர்களுக்கும் இந்த steemit மூலமாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், இலவசமாக கற்றுக்கொடுக்க விழைகிறேன்.
நான் steemit ல் இணைந்து 3 நாட்களே ஆகின்றன. இந்த மூன்று நாட்களில் இதுவரை 4 செய்திகளை steemit ல் பதிவேற்றம் செய்திருக்கிறேன். என்னுடைய செய்திகள் எல்லாம் நான் சுயமாக யோசித்து எழுதுபவைகள் தான்.
வானத்தையும் அதில் நிறைந்திருக்கிற அனைத்தையும், சர்வ உலகத்தையும் உருவாக்கி வைத்துள்ள திருத்துவ தேவன் பேரில் அசையாத நம்பிக்கை கொண்டுள்ளேன். ஜாதி மற்றும் மத நம்பிக்கை எனக்கில்லை.
ஜாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி.
எந்த விஷயத்தையும் நேர்மையுடன் கையாள வேண்டும் என்கிற தத்துவத்தில் நான் செய்கிற அனைத்து விஷயங்களிலும் கடைபிடித்து வருகிறேன். இதுவரை என் மனைவியைத் தவிர வேறு எவரையும் வாழ்க்கையில் ஏமாற்றியதில்லை. அதே சமயம், நான் யாரிடமும் ஏமாந்து போகமாட்டேன்.
அன்பு உள்ளங்களே, என்னுடைய செய்திகளை தொடர்ந்து படித்து வந்தீர்களானால், வாழ்க்கையில் முறைப்படி பணம் சம்பாதித்து எப்படி செல்வந்தராக உயரலாம் என்கிற ரகசியங்களை நன்கு அறிந்துகொள்ளலாம்.
ஏற்கனவே செல்வந்தர்களாக இருப்பவர்கள் மட்டும்தான் மென்மேலும் பணம் சேர்க்க முடியும் என்கிற தவறான எண்ணங்களை களைந்து போட்டுவிடுங்கள். மிகவும் சொற்ப வருமானம் பெருகிறவர்கள் கூட இந்த எளிய முறையைப் பின்பற்றி வந்தால் உங்கள் வாழ்க்கையில் நீங்களும் பெரும் செல்வந்தர்களாக உயரலாம் என்கிற உண்மையில் எந்த மாற்றமும் இல்லை.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். தொடர்ந்து என்னுடைய செய்திகளை படித்து வாருங்கள். நான் சொல்லுகிற எளிமையான விஷயங்களை உங்கள் வாழ்க்கையில் செயல்படுத்துங்கள். அதிகபட்சமாக 10 அல்லது 15 வருடங்களில் நீங்களும் செல்வந்தராகலாம்.