பாகம் இரண்டு:
பாகம் ஒன்றை வாசிக்காமல், நேரடியாக இந்த பாகம் இரண்டை வாசிப்பவர்களுக்கு பணிவன்புடன் கூடிய ஒரு வேண்டுகோள்.
முதலில் பாகம் ஒன்றை வாசித்துவிட்டு, இந்த இரண்டாம் பாகத்தை வாசித்தால் உங்களுக்கு குழப்பம் ஏதும் ஏற்படாது. எனவே தயவு கூர்ந்து, முதலில் பாகம் ஒன்றை ஓரிரு முறைகளாவது வாசித்துவிட்டு, பின்பு இந்த இரண்டாம் பாகத்தை வாசித்து பயன் பெறுங்கள்.
steemit ல் நான் how to become rich என்கிற username ல் செயல்படுகிறேன். எனவே நீங்கள் என்னுடைய username கொண்டு search செய்தால் என்னுடைய எல்லா போஸ்ட்டுகளையும் உங்களால் கண்டுபிடித்து வாசிக்க இயலும்.
உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? 90 : 10 formula தெரியுமா? உலகம் முழுவதும் இருக்கிற சொத்துக்களில் 90 சதவீதம் வெறும் 10 சதவீதம் உலக செல்வந்தர்கள் வசம்தான் இருக்கிறது. மீதி இருக்கிற 10 சதவீதம் சொத்துக்களுக்காக உலகிலுள்ள 90 சதவீதம் நடுத்தர மற்றும் ஏழை ஜனங்கள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறோம். இது ஒரு ரகசியமல்ல, ஊருக்கே தெரிந்த உண்மை.
நாம் செல்வந்தராவது எப்படி?
இந்த ரகசியத்தை நாம் யாரிடமிருந்து கற்றுக்கொள்வது?
ஏற்கனவே செல்வந்தராக இருக்கிறார்கள் அல்லவா, அவர்களிடமிருந்து முதலில் கொஞ்சம் கற்றுக்கொள்வோம்.10 சதவீதம் செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தை பெருக்கிக்கொள்ள என்ன முறையைக் கையாளுகிறார்கள்?
இதை தெரிந்து கொள்வதற்கு முன், மீதமுள்ள 90 சதவீதம் நடுத்தர மற்றும் ஏழை ஜனங்கள் பொதுவாக என்ன முறையில் தங்கள் பணத்தை கையாளுகிறார்கள் என்று முதலில் பார்ப்போமா?
நாம் என்ன செய்கிறோம்? பிறருக்காக மாதம் முழுவதும் வேலை செய்கிறோம். அதற்காக அவரவர்களுடைய தகுதிக்குத் தகுந்தாற்போல சம்பளம் தரப்படுகிறது. அநேகமாக இந்த 90 சதவீத நடுத்தர மற்றும் ஏழை ஜனங்களுக்கு கிடைப்பது சம்பளம் என்கிற இந்த ஒரே ஒரு வருமானம் மட்டும்தான். ஆனால் செலவுகளோ பல வகைகளாக இருக்கிறது.
நாம் வாங்குகிற மாதச் சம்பளம் என்கிற ஒரே ஒரு வருமானத்தை கொண்டு நாம் சந்திக்கவேண்டிய செலவுகளை இங்கே பட்டியலிடுவோமா? முதலில் வீட்டு வாடகை செலுத்தவேண்டும். அடுத்ததாக, மின்சாரக் கட்டணம் செலுத்தவேண்டும். போன மாதம் வாங்கின அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய் இத்யாதி இத்யாதி இவைகளுக்கெல்லாம் பணம் செலுத்தவேண்டும்.
அநேகமாக எல்லோருமே 2 வீலர் வைத்துள்ளார்கள். அதற்கு பெட்ரோல் போடவேண்டும். ஒரு வேளை மாதத் தவணை முறையில் இரண்டு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் வாங்கியிருந்தால், அதற்கும் தவணைத் தொகையைச் செலுத்தவேண்டும்.
இது போக, நம்மில் அநேகர் கிரெடிட் கார்டு வைத்துள்ளார்கள். அதன் மூலமாக, நமக்கு மொபைல் போன், லேப் டாப், டேப்லெட், ஆன்ட்ராய்டு டீவி, சேலை, சட்டை, இத்யாதி இத்யாதி வாங்கி குவித்திருப்போம். மாதத் தவணை முறையில் வாங்கின கடனுக்கான தொகையும் பெருகியிருக்கும்.
அதுபோக, பள்ளி செல்லும் நம்முடைய பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ், ட்யூசன் பீஸ், டொனேஷன், ஸ்கூல்-பஸ் செலவு ............
நமக்கு கிடைக்கிற ஒரே ஒரு சம்பளத்தை மட்டும் நம்பிக்கொண்டு இவ்வளவு கடன் சுமைகளை, நாம் வாழ்நாள் முழுவதும் சுமக்கிறோம். இப்படியே நம்மில் அநேகர் வாழ்க்கையும் முடிந்துவிடுகிறது அல்லவா?
சொந்த வீடு நமக்கு இருந்தால், அநேகமாக அது நாம் வங்கியில் கடன் வாங்கி கட்டினதாகத்தான் இருக்கும். மாதச்சம்பளம் வாங்குபவர்கள், வேலையிலிருந்து ஓய்வு பெரும் வரை இந்த வீட்டுக் கடனைக் கட்டிக்கொண்டே இருப்போம். வீடு கட்ட 35 லட்ச ரூபாய் வங்கியில் கடன் பெற்றிருப்போம். ஆனால் நாம் கட்டி முடிக்கவேண்டிய தவணை தொகையை கணக்கிட்டால், 65 லட்ச ரூபாய்க்கு மேல் வரும்.
நாம் ஒவ்வொருவரும் வாங்குகிற சம்பளம் என்கிற ஒரே ஒரு வருமானத்தில் எண்ணிலடங்கா செலவுகளை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே நாம் வாழ்நாள் முழுவதும் கடன்காரர்களாகவே வாழ்ந்து முடிக்கவேண்டிய ஒரு நிர்ப்பந்தமான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.
இந்தச் சிக்கலிலிருந்து விடுபட்டு, நாமும் செல்வந்தராக வாழ முடியுமா? அதற்கு உண்மையாகவே நல்ல ஒரு வழி இருக்கிறதா? இதுதானே உங்கள் அனைவரின் உள்ளத்தில் இப்போது தோன்றும் ஆதங்கம் / கேள்வி?
நிச்சயமாகவே நமக்கு விடுதலை காத்திருக்கிறது. அது வேறு யாரும் நமக்கு வந்து கொடுப்பார்கள் அல்லது நமது வாயில் வைத்து ஊட்டி விடுவார்கள் என்று நாம் நினைப்போமானால், அது உங்கள் தவறு. நம் வாழ்க்கை நம் கையில்தான் இருக்கிறது. நாம்தான் அதைப் பெற்றுக்கொள்ள தவறிவிடுகிறோம். இப்போதும் ஒன்றும் காலம் கடந்து போகவில்லை. உங்கள் நம்பிக்கையை மட்டும் ஒருபோதும் இழந்து போய்விடாதீர்கள்.
நமக்கு கிடைக்கவிருக்கிற அந்த பொருளாதார விடுதலை குறித்த அந்த மாபெரும் ரகசியம் என்னவாக இருக்கும்? இது சாத்தியப்படுமா? அல்லது இந்த செய்தியின் மூலமாக யாரோ ஒருவர் நம்மை ஏமாற்ற முயற்சிக்கிறாரா? இந்த கேள்வியெல்லாம், உங்கள் உள்ளத்தில் தோன்றுகிறதல்லவா?
நிச்சயமாக நீங்கள் ஏமாற்றப்படவும் இல்லை. தவறாக வழிநடத்தப்படவும் இல்லை. நம்பிக்கையுடன் இந்த செய்தியின் மூன்றாம் பாகத்தை வாசியுங்கள். நிச்சயமாகவே முடிவு உண்டு. உங்கள் நம்பிக்கை வீண்போகாது.