காளான் பக்கோடா
தேவையான பொருட்கள்:
காளான் 125 கிராம்
கரம் மசாலா 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு அரைத்த விழுது 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் அரைத்த விழுது ஒரு டேபிள்ஸ்பூன்
சோள மாவு 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
கேசரி பவுடர் தேவையான அளவு
செய்முறை:
முதலில் காளானை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் நறுக்கிய காளான் மசாலா இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் விழுது சோள மாவு கேசரி பவுடர் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
ஒரு வானொலியை எடுத்துக்கொண்டு எண்ணையை ஊற்றி அது சூடானதும் அதில் காளான் கலவையை உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சூடான சுவையான காளான் பக்கோடா தயார்