நொறுக்கு தீனிக்கு லீவு:
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் நொறுக்குத்தீனிகள் சொல்வது அவசியமாகும் முக்கியமாக குக்கீஸ், சாக்லேட், சிப்ஸ் போன்றவைகளை தவிர்க்க வேண்டும்
குறைவான உப்பு சர்க்கரைக்கு நோ சொல்லுங்கள்:
தினமும் உபயோகிக்கின்ற சர்க்கரையின் அளவை குறைத்துக் கொள்வது உடலுக்கு நல்லதாகும். ஏனென்றால் நாம் எடுத்துக் கொள்கின்ற சர்க்கரை, உடலின் கலோரியை அதிகரிக்கும். ஜூஸ், மில்க்க்ஷேக் போன்றவைகளை எல்லாம் சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும். அதேபோல உப்பையும் குறைத்து பயன்படுத்த வேண்டும்.
தினமும் உடற்பயிற்சி தேவை:
உடற்பயிற்சி என்றால் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று தான் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. வீட்டிலேயே எளிமையான உடற்பயிற்சிகளையும் செய்ய முடியும். இதனால் உடலில் தேங்கும் தேவையற்ற கொழுப்பு கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் நலமும் பாதுகாக்கப்படுகிறது. உடல் பருமன் அதிகரித்தால் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும். அதனை தவிர்க்க வேண்டுமென்றால் நடந்து செல்ல வேண்டிய சிறு தூரம் உள்ள இடங்களுக்கெல்லாம் வாகனங்களை பயன்படுத்தாமல் நடந்தே செல்வது மிகச் சிறந்தது. அதனால் கலோரியும் எரிக்கப்படும்.
புரதம் மிக அவசியம்:
உடல் எடையை குறைக்கிறேன் என சொல்லிக்கொண்டு உடலுக்கு தேவையான சத்தான உணவுகளை தவிர்ப்பது மிகவும் தவறு. இவ்வாறு செய்வதினால் உடலில் பலம் குறையும். உடலின் திசுக்களுக்கு தேவையான புரதச்சத்து நிறைந்த உணவுகளை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முட்டையின் வெள்ளைக்கரு தினமும் எடுத்துக்கொள்ளலாம் .மஞ்சள் கருவினை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், அதில் அதிக அளவு கொழுப்பு சத்து உள்ளது.