#how to become rich
THE RULE OF 72 பற்றி நம்மில் அநேகருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. FINANCIAL MANAGEMENT ஐ பொறுத்தமட்டில் RULE OF 72 மிகவும் முக்கியமானது.
நீங்கள் முதலீடு செய்யும் பணம் இரட்டிப்பு பெறுவதற்கு, அதாவது இரண்டு மடங்காக பெருகுவதற்கு எத்தனை வருடங்கள் எடுத்துக் கொள்கிறது என்பதனை நாம் கணக்கிட்டு பார்த்துக்கொள்ள நமக்கு உதவி செய்கிற ஒரு FORMULA தான் RULE OF 72.
தற்போதெல்லாம் நமது இந்திய வங்கிகள் அனைத்துமே, நாம் வங்கியில் டெபாசிட் செய்யும் பணத்திற்கு 5% அல்லது அதற்கு குறைவாகவோதான் வட்டி கொடுக்கிறார்கள். சீனியர் சிட்டிசன்களுக்கு 0.5% அதிகமாக வட்டி தரப்படுகிறது. அவ்வளவுதான்.
அப்படியென்றால், நீங்கள் வங்கியில் டெபாசிட் செய்யும் பணம் இரண்டு மடங்கு பெருக எத்தனை வருடங்கள் எடுத்துக்கொள்கின்றன என்று பார்ப்போமா?
உதாரணமாக, நீங்கள் ஒரு 5 லட்ச ரூபாய் வங்கியில் fixed deposit இல் செலுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு உங்களுக்கு கொடுக்கப்படும் வருடாந்திர வட்டி ( ANNUAL INTEREST ) 5% ( ஐந்து சதவீதம் மாத்திரம் )
நீங்கள் வங்கியில் மேற்கூறியவாறு வைப்பு நிதியில் போட்டு வைக்கும் பணம் ரூபாய் ஐந்து லட்சம் 5% வட்டியில் இரண்டு மடங்காக பெருகுவதற்கு, அதாவது ரூபாய் பத்து லட்சமாக உயர்வதற்கு எத்தனை வருடங்கள் ஆகின்றது என்று தெரியுமா?
RULE OF 72 ல் இருக்கிற 72 ஐ வட்டியாக உங்களுக்குத் தரப்படுகின்ற 5 சதவீதத்தை கொண்டு வகுத்தால் 14.4 விடையாக வரும். எனவே நீங்கள் வங்கியில் டெபாசிட் செய்யும் ரூபாய் 5 லட்சம் @ 5% வட்டியில் இரண்டு மடங்காக, அதாவது 10 லட்சமாக பெருகுவதற்கு எடுத்துக்கொள்ளும் வருடங்கள் 14.4
ஆனால் இந்தியாவில் விலைவாசி உயர்வோ வருடத்திற்கு 12%. இந்த எண் 12 ஐ 72 இல் வகுத்துப் பார்த்தால் உங்களுக்கு கிடைக்கும் விடை 6. அதாவது ஒவ்வொரு பொருளின் விலையும் நமது நாட்டில் ஆறு வருடங்களுக்கு ஒரு முறை இரண்டு மடங்காக உயருகிறது. இந்த விலை உயர்வை, இத்தனை வருடங்களாக நமது இந்திய அரசாங்கம் கூட தடுக்க முடியவில்லை.
எனவே நாம் முதலீடு செய்யும் பணம் நமக்கு வருடத்திற்கு குறைந்த பட்சம் 12% வளர்ச்சியாவது பெற்றுத் தந்தால்தான், விலைவாசி உயர்வு நம்மை ஒருபோதும் பாதிக்காது.
அதே சமயம் நமது முதலீட்டு பணம், நமக்கு வருடத்திற்கு 24% அல்லது அதற்கும் மேலே வளர்ச்சி பெற்றுத் தரும் முதலீடுகளில் நமது பணத்தை போட்டால்தான், நாம் செல்வந்தராக மாறமுடியும்.