#How to become rich
நாம் செல்வந்தராக வேண்டுமென்றால் அதற்கென்று ஒரு நல்ல திட்டம் வகுக்கவேண்டும் அல்லவா?
இந்தியா ஆகஸ்ட் 15, 1947ல் சுதந்திரம் பெற்ற பின்பு, நமது இந்திய அரசாங்கம் தொடர்ந்து, நமது நாடு பொருளாதார ரீதியான வளர்ச்சி பெறவேண்டும் என்பதற்காக, ஐந்தாண்டு திட்டத்தை வகுத்து தொடர்ச்சியாக ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அமுல்படுத்தி வருகிறது.
அதே போல நீங்களும் தொடர்ச்சியாக ஒரு நல்ல திட்டம் உருவாக்கி, அதை தொடர்ந்து இடைவெளி இல்லாமல் செயல்படுத்தி வந்தால்தான், நீங்களும் செல்வந்தராக முடியும்.
ஆனால் அதற்கு முன்பு, நீங்கள் விலைவாசி உயர்வு குறித்து அடிப்படை ரீதியாக அறிந்துகொள்வது அவசியமாகிறது. எனது முந்தின செய்திகளில் RULE OF 72 பற்றி சொல்லியிருக்கிறேன். AS PER RULE OF 72 ஒவ்வொரு பொருளின் விலையும் ஆண்டுக்கு ஒரு முறை 12% உயர்ந்துகொண்டே வருகிறது என்கிற உண்மையை நம் யாராலும் மறுக்க முடியாது. அதன் காரணமாக ஒவ்வொரு பொருளின் விலையும் 6 வருடங்களுக்கு ஒரு முறை இரண்டு மடங்காக உயர்ந்துகொண்டே இருக்கிறது.
RULE OF 72 ல் இருக்கிற 72 ஐ 12% விலைவாசி உயர்விலுள்ள 12 ஐ கொண்டு வகுத்தால் வருகிற விடை 6. அதாவது ஒவ்வொரு பொருளின் விலையும் 6 வருடங்களில் இரண்டு மடங்காக உயர்ந்துவிடுகிறது என்பதனை இது அறிவிக்கறது.
நீங்கள் கேட்கலாம், வருடத்திற்கு 12% தானே விலைவாசி உயர்கிறது? அப்படியானால் 6 வருடங்களுக்கு 6 X 12 = 72% தானே வருகிறது? பின்னர் எப்படி, நீங்கள் 6 வருடங்களுக்கு ஒரு முறை விலைவாசி இரண்டு மடங்காக உயருகிறதென்று கூறமுடியும்? என்று கேட்கலாம்.
உங்கள் சந்தேகத்தை தெளிவு படுத்துவதற்காக கீழ்கண்ட கணக்கீட்டை நீங்களே ஒரு முறை சோதித்து பாருங்கள்:
போன வருடம் ஒரு கிலோ பிரியாணி அரிசி விலை ரூபாய் 100
1 வருடம் கழித்து 12% விலை உயர்வு காரணமாக ரூபாய் 112
2ம் வருடம் 12% விலை உயர்வு காரணமாக ரூபாய் 125.44
3ம் வருடம் 12% விலை உயர்வு காரணமாக ரூபாய் 140.4928
4ம் வருடம் 12% விலை உயர்வு காரணமாக ரூபாய் 157.351936
5ம் வருடம் 12% விலை உயர்வு காரணமாக ரூபாய் 176.23416832
6ம் வருடம் 12% விலை உயர்வு காரணமாக ரூபாய் 197.382268518
இந்த அடிப்படை கணக்கீட்டை பற்றி உங்களுக்கு முதலில் ஒரு தெளிவு கிடைத்தால்தான், நீங்கள் செல்வந்தராவதற்கு தேவையான நல்ல ஒரு திட்டத்தை உருவாக்க முடியும். எப்படி ஒரு வீடு கட்டுவதற்கு, அஸ்திபாரம் என்று ஒன்று எப்படி தேவைப்படுகிறதோ, அது மாதிரிதான் இந்த சூத்திரம்.
முதலில் இதனைத் தெரிந்து கொள்ளுங்கள். பிறகு, செல்வந்தராவதற்கு என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றன என்பதனை நான் உங்களுக்கு மிகவும் தெளிவாக கற்றுத் தருகிறேன். உங்கள் நேரத்தை செலவழித்து, பொறுமையுடன் என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் பொறுமைக்கும் / நேரத்திற்கும் நன்றிகள் பல, பல. நாளைய செல்வந்தர்களாகிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.