அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)
மூதுரை (MOOTHURAI)
வெண்பா : 1
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
'என்று தருங்கொல்?' எனவேண்டாம் - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.
விளக்கம்:
தென்னைக்கு இன்று நீர்விட்டு வளர்த்தால் ஒருநாள் அது வளர்ந்தபின் நமக்கு நன்றிக்கடனாக இளநீரை கொடுக்கும். அதுபோல இன்று நாம் ஒருவருக்கு செய்யும் உதவிக்கு பலன் என்று கிடைக்குமோ என ஏங்கி இருக்க வேண்டாம். அதற்க்கு பிரதிபலன் ஒருநாள் தானே வந்து சேறும்.
Description :
If we feed by water for coconut tree today, one day when it grows, it will give us tender coconut as a token of gratitude. Likewise, do not be anxious about the benefit of the help we render to someone today, if we wait, one day, we will get back the benefit of our help in some other way.