அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)
மூதுரை (MOOTHURAI)
வெண்பா : 2
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர்மேல் எழுத்துக்கு நேர்
விளக்கம்:
நல்லவர் ஒருவருக்கு நாம் செய்யும் உதவியானது, கல்லின் மேல் எழுத்தைச் செதுக்குவது போன்றது. அது எவரும் அறியும் வண்ணம் என்றென்றும் நிலைத்திருக்கும். மாறாக இரக்கமற்றவருக்கு நாம் செய்யும் உதவியானது, நீரின் மேல் எழுதும் எழுத்துக்களைப் போன்று பயனின்றி நிலைக்காது போகும்.
Description :
The help we give to a good person is like carving letters on a stone, anyone knows will last forever. Rather the help we render to the ruthless will not be as useless as writing on the water.